Thursday, December 31, 2009

என் கவிதைகள் சில

என்னில்..

சந்தோஷத்தை கவிதையாக்க நினைத்தேன்
பிழை நிறைந்த கவிதைகளே பிறந்தன..

வறுமை..

தங்கச் சுரங்க
தொழிலாளியின் மகள்
தயங்கி கேட்டாள்..
அப்பா இந்த பிறந்தநாளுக்காவது
கண்ணாடி வளையல்...

நம்பிக்கை..

விதை
விழுவதெல்லாம்
முளைப்பதற்க்காகவே..

நான்..

எறிய துடிக்கும்
தீக்குச்சியாய்
தீப்பெட்டிக்குள்..



No comments:

Post a Comment